Monday, 26 May 2014

இம்மையும் மறுமையும்!

‘இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்’ எனும்
அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்;
பிறரும் சான்றோர் சென்ற நெறியென,
ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே.


-உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன் 
திணை: பாடாண் துறை: இயன் மொழி 

உடையேம் இலமே!

அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவின்
எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார்
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவின்
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே.


-பாரி மகளிர் 
திணை: பொதுவியல் துறை: கையறு நிலை 

மக்களை இல்லோர்!

படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் - தாம் வாழும் நாளே. 

-பாண்டியன் அறிவுடை நம்பி 
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி 
(மக்கட் பேற்றின் சிறப்பைக் கூறம் சிறந்த செய்யுள் இது.)