Tuesday, 6 September 2016

பஞ்சு அருணாசலம்

பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
என் மன தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்

தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டு கை பட பாடுகிறேன்

பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்

முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட செங்கனி சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே

பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா

தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று
சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு

பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா

என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின்
என்னிடம் கோபம் கொள்ளுவதோ
என்னிடம் கோபம் கொள்ளுவதோ
ஒன்றில் ஒன்றான பின்
தன்னைத் தந்தான பின்
உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ

பொன்னெழில் பூத்தது தலைவா வா
வென் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா

Sunday, 10 April 2016

திருப்புமுனையான திருப்புறம்பயம் போர் - விஜயாலயச் சோழன்















சோழர்களின் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த திருப்புறம்பயம் போர் 
இக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவ மன்னன் அபராஜிதவர்மருக்கும், பாண்டிய மன்னன் வரகுண வர்மனுக்கும் இடையில் திருப்புறம்பயம் என்னும் இடத்தில் நடைபெற்றது.இப்போரில் பல்லவர்களுக்கு ஆதரவாக சோழர்களும் பாண்டியர்களுக்கு ஆதரவாக முத்தரையர்களும் போரிட்டனர்.அபராஜிதவர்மனுக்குத் துணையாக கங்க நாட்டு மன்னன் பிரிதிவீபதி வந்திருந்தான்.இப்போரில் விஜயாலயச் சோழனின் மகன் முதலாம் ஆதித்தன் சோழப்படையின் மாதண்ட நாயக்கராக போரிட்டான்.அந்த நேரத்தில் விஜயாலயச் சோழன் இரு கால்களும் செயலிழந்த நிலையில் தன் மகனின் வீரத்தை போர்க்களத்தில் காண பல்லக்கில் சென்றிருந்தார்.அங்கே போர் முகாமில் பல்லவ-சோழப் படைகள் கிட்டத்தட்டதோல்வியடைந்து சரணடையும் முடிவுக்கு வந்ததை கேள்விப்பட்டு கோபமடைந்த விஜயாலயர் (அப்போது அவருக்குவயது கிட்டத்தட்ட 90) இரு வீரர்களின் தோளில் ஏறிக் கொண்டு போருடைப் பூண்டு வாளினை சுற்றிக் கொண்டு களமிறங்கினார்.இதுகண்ட சோழப்படை மீண்டும் வீறாப்புடன் போராடி வெற்றிபெற்றது.கங்க மன்னன் பிரதிவீபதி அன்றைய போரில்வீர சொர்க்கம் எய்தினான். இப்போரின் மூலம் சோழர்கள் முத்தரையர்களை ஒழித்து தஞ்சையை தன் தலைமையின் கீழ் கொண்டு வந்தனர்.இப்போரில் பல்லவர்கள் வெற்றி பெற்றாலும் அவர்கள் வலிமை மிக வெகுவாக குறைந்தது.

Monday, 4 April 2016

Mobile

என்ன ஒரு தலைப்பு
யாருக்கும் கிடைக்காத தலைப்பு
கைப்பேசி !!!
யாருக்கு தான் பிடிக்காது
வண்ணத்தில் வடிவத்தில்
எண்ணத்தின் செயல் திறனை
பன்மடங்கு பயன் உள்ளதாக்கும் கருவி


இப்போது உள்ள தலைமுறையினருக்கு
கைப்பெசியே முதலாம் கருவி !!
இரெண்டாவது எண்ணம்,
சிலருக்கு மூன்றாவது கண்,
அதுவே நான்காவது பொருள்
போற்றும் ஐந்தாம் மறை
பலருக்கு ஆறாம் விரல் 
கொடுக்கும் ஏழாவது சுவை
இசைக்கும் எட்டாவது சுவரம்
திசையில்  ஒன்பதாவது முனை

என ஒப்பற்ற ஆற்றல் உடையது.

ஏய் கைப்பேசி !! நீ எங்கு இருந்து உதித்தாய்
இத்தனை நூற்றாண்டுகளாக எங்கு இருந்தாய் 
மொபைலே மொபைலே நீ யாரோ 
தொலைபேசியே உனக்கு தாயாரோ
உலகம் தோன்றியது 4.5 கோடி வருடங்களுக்கு முன்பு, 
மனித இனம் தோன்றியது 2 லட்சம் வருடங்களுக்கு மன்பு,
தீயை உபயோகித்தது 1.5 லட்சம் வருடங்களுக்கு மன்பு,
இப்படி தீ, சக்கரம், மண்பாண்டம், மின் ஆற்றல், கணினி 
என்று ஒவ்வொன்றிக்கும் பரிணாமம் எடுத்துகொண்டது எத்தனை வருடங்கள்
ஆனால் நீயோ அடைத்து வைத்த ஆற்றல்
எறிமலையாய் வெடிப்பது போல் உதிர்த்தாய்

நீ மட்டும் வள்ள்ளுவனின் கையில் இருந்திருந்தால்
திருக்குறள் அன்றே உலக மொழி அனைத்திற்கும்
மொழி பெயர்க்க பட்டிருக்கும்,
இயேசுவின் கையில் இருந்திருந்தால்
14வது சீடனாக பிரகடனம் செய்திருப்பார்
நபியின் கையில் இருந்திருந்தால்
நன்னெறி திருக்குரான் உன் வழியாக போதிக்க பட்டிருக்கும்
புத்தனின் கையில் இருந்திருந்தால்
விகாரங்களில் உன்னை நிறுவி இருப்பார் (செல் போன் கோபுரங்களுடன்)
ரோமனின் கையில் இருந்திருந்தால்
போரின்றி உலகை ஆண்டிருப்பான்

எத்தனை சரித்திரங்கள் உன்னால் மாற்ற பட்டிருக்கும் 
எட்டப்பனின் காட்டி கொடுத்த உரையாடலை உளவறிந்து 
கட்டபொம்மன் வென்றிருப்பான் 
சீதையின் கைப்பேசி அலைவரிசையை வைத்து 
இராமன் இராவணனை வதைதிருப்பான் 
இயற்கை சீற்றத்தை கைபேசி மூலம் முன்பறிந்து 
மாயன், போம்ப்பே, பார்சிலோனா, ரோமானிய, கிரேக்க, ஆதிச்சநல்லூர் 
போன்ற தொன்மையான அழிந்த நாகரிகங்கள் மீண்டிருக்கும் 
எல்லோரவில் தீட்டிய வண்ணம் 
paint brush மூலம் மெருகேற்ற பட்டிருக்கும் 
பைசா வின் கோபுரம் smart utility tool மூலம் நிமிர்ந்திருக்கும்

கருப்பு வெள்ளையை விட்டு நிகழ் காலத்திற்கு வருவோம்
ஒரு கருவி ஓராயிரம் பயன்பாடு
அறத்திற்கும் ஆன்மீகத்திற்கும் (to be included )
சமூக தொடர்புக்கு முகநூல்
சிந்தனை பதிவிற்கு blogger
குறும் பதிவிற்கு whatsapp
குறும்பு பதிவிற்கு twitter
ரௌத்திரம் பழக angry birds
ஓடிவிளையாட temple run
கூடி விளையாட clash of clans
பல்லுயிர் பேன talking tom
முகம் பார்க்க கண்ணாடி பார்ப்பது அந்த காலம்
இன்று பார்ப்பதோ கைபேசியில் இருக்கும் front cam இல்
சித்தரமும் கை பழக்கம் போய் கை பேசி பழக்கம் என்றானது
முன்பு மதுரைக்கு வழி வாயில் என்பார்கள்
இன்று உலகிற்கே வழி காட்ட ways  என்கிறார்கள்
இப்போதெல்லாம் நேரத்தை பார்க்க
கை கடிகாரத்தை யாரும் பார்த்ததாக இல்லை,
கைபேசியிலேயே SGT , MYT, IST , GMT  என்று
இப்போழுதில் உலக நேரத்தை ஒப்பிடுகின்றார்கள் 
வெள்ளித்திரையை கைபேசி youtube இல் பார்த்தது போக
கைபேசி camera வில் படம் எடுத்து, பதிவேற்றி, வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு இயக்குனறாகவும் தயாரிப்பாளர் ஆகவும் தேர்ந்து விடுகிறார்கள்.
கல்வெட்டு, செப்பேடு, பனைஓலை, கரும்பலகை, தாள், நூல்,
என்று இதனை வருடங்களாக பயன் படுத்தியதை
தூக்கி எரிந்தது கைபேசி என்று சொன்னால் மிகையாகது


இப்படி பட்ட கைபேசியின் குறை பாட்டை பற்றி நானே எப்படி பேச.
நடுவர்களே, ஆசிரியர்களே, சான்றோர்களே, நாட்டமைகளே ....
தயவு செய்து தலைப்பை திருத்தி வையுங்கள்
கைபேசி என்றுமே குறைபட்டதில்லை
"கைபேசியின் பயன்பாடும், பயன்பாட்டின் குறைபாடும்" என்று மாற்றி எழுதுங்கள்
ஆம் நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எரிவது வீணையின் குற்றமல்ல, வீணாக புழுதியில் விட்ட வீணர்களின் குற்றம்.
இப்படி பட்ட பேராற்றல் கொண்ட வருவியை
தவறாக பயன்படுதுவரும் சிலர் உண்டு.
குறிப்பாக சிறுவர்கள் போழுதன்றிற்கும் கைபெசியிலேயே நேரத்தை செலவிடுவதை குறைக்க வேண்டும்.

Tuesday, 21 July 2015

காவிரிப் பூம்பட்டினம்

காவிரிப் பூம்பட்டினத்து இரவு நேர நிகழ்வுகள்

துணைப் புணர்ந்த மட மங்கையர்
பட்டு நீக்கித் துகில் உடுத்தும்
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும்
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்
மகளிர் கோதை மைந்தர் மலையவும்
நெடுங்கால் மாடத்து ஒள் எரி நோக்கிக்
கொடுந்திமில் பரதவர் குருஉச்சுடர் எண்ணவும்
பாடல் ஓர்ந்தும் நாடகம் நயந்தும்
வெண் நிலவின் பயன் துய்த்தும்
கண் அடைஇய கடைக் கங்குலான் (106- 115)

The Night Events

Delicate women who unite with their
husbands wear cotton instead of silk and
drink wine instead of toddy.

Men wear women’s garlands and women
wear men’s garlands.

Fishermen plying curved boats watch
bright lights in the mansions with tall pillars.

People listen to songs, watch plays and enjoy
the white moon’s benefits, as they go to sleep
in the last phase of night.

Saturday, 16 May 2015

செம்பியன் - சிறுபாணாற்றுப்படை

நத்தத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது சிறுபாணாற்றுப்படை எனும் இந்நூல். இது 269 அடிகளாலமைந்தது. ஒய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் என்பவனைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல், அம்மன்னனிடம் பரிசு பெற்ற சிறுபாணன் ஒருவன் தான் வழியிற் கண்ட இன்னொரு பாணனை அவனிடம் வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

சோழநாட்டின் பெருமை
நறு நீர்ப் பொய்கை அடை கரை நிவந்த
துறு நீர்க் கடம்பின் துணை ஆர் கோதை
ஓவத்து அன்ன உண் துறை மருங்கில்
கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின் [68-71]
வருமுலை அன்ன வண்முகை உடைந்து
திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை
ஆசு இல் அங்கை அரக்குத் தோய்ந்தன்ன
சேயிதழ் பொதிந்த செம் பொற்கொட்டை
ஏம இன் துணை தழீஇ இறகு உளர்ந்து
காமரு தும்பி காமரம் செப்பும். (72-77)

தண் பணை தழீஇய தளரா இருக்கை
குணபுலம் காவலர் மருமான் ஒன்னார்
ஓங்கு எயில் கதவம் உருமுச்சுவல் சொறியும்
தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்

ஓடாப் புட்கை உறந்தையும் வறிதே அதாஅன்று (78-83)


குளிர்ச்சியான மருத நிலத்தைச் சார்ந்த சோர்வில்லாத (உழைப்பிலே ஈடுபட்டிருக்கும் மக்களைக் கொண்ட) ஊர்கள் விளங்கும் கிழக்குத் திசை நாட்டைக் காத்து வருபவன். சோழ மன்னர்களின் வழித்தோன்றல். இவன் நாட்டுக் குதிரைகள், பகைவர் நாட்டு உயர்ந்த மதிற்சுவரின் கதவுகளில், தனது கழுத்து மயிரை இடிமுழக்கம் போன்று தேய்க்கும். மன்னனோ பகைவர்களின் தூங்கு எயிலை அழித்த பெருமையினைப் பெற்ற சோழர் குலத்தில் தோன்றியவன். தொடி அணிந்த கைகளை உடையவன். இத்தகைய மன்னன் ஆட்சி செய்கின்ற சோழ நாட்டைவிட்டுக் குடிமக்கள் பெயராமல் மனஉறுதியோடு இருப்பதற்குக் காரணமான உறந்தை என்ற ஊரில் நீ பெறுகின்ற பரிசுப் பொருட்களும் குறைவானதாகவே இருக்கும் அது மட்டுமன்று.
(முன்னொரு காலத்தில் நல்லவர்களைத் துன்புறுத்தி வந்த அசுரர்களின் தொங்கும் மதிலைச் சோழ மன்னனொருவன் அழித்ததால், தூங்கெயில் எறிந்த பெருமையினைச் சோழர் குலம் பெற்றது என்பர்.  தூங்குஎயில் மூன்றெறிந்த சோழன் (சிலம்பு 5 ; 29) ஒன்னார் உட்கும் கடுந்திறல் தூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர் (புறம் 39, 5-6) என்பன போன்ற இலக்கிய வரிகளாலும் இச்செய்தியினை அறியலாம்)

Friday, 8 May 2015

தமிழ் இலக்கியம்


சங்க இலக்கிய நூல்கள்

பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணைகுறுந்தொகை
ஐங்குறுநூறுபதிற்றுப்பத்து
பரிபாடல்கலித்தொகை
அகநானூறுபுறநானூறு

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை


பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படைபொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படைபெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டுமதுரைக்காஞ்சி
நெடுநல்வாடைகுறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலைமலைபடுகடாம்


முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப்பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து
என வரும் பழம்பாடல், பத்துப் பாடு நூல்கள்.



பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார்நான்மணிக்கடிகை
இன்னா நாற்பதுஇனியவை நாற்பது
களவழி நாற்பதுகார் நாற்பது
ஐந்திணை ஐம்பதுதிணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபதுதிணைமாலை நூற்றைம்பது
திருக்குறள்திரிகடுகம்
ஆசாரக்கோவைபழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம்முதுமொழிக்காஞ்சி
ஏலாதிகைந்நிலை

  • பழங்காலம்
  • இடைக்காலம்
  • இக்காலம்
  • பத்தொன்பதாம் நூற்றாண்டு
  • இருபதாம் நூற்றாண்டு
  • இருபத்தோராம் நூற்றாண்டு

புறத்திணை இயல்

வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்

மனித வாழ்வின் உறுதிப்பொருள்களில் அறம், பொருள், வீடு என்ற மூன்றைப் பற்றிய செய்திகள் இங்கு கூறப்படுகின்றன. புறத்தார் யாவருக்கும் புலப்படும் ஒழுக்கத்தைப் பற்றி கூறுவதால் “புறப்பொருள்” எனப்பட்டது. இப்புற ஒழுக்கம் பத்து வகைப்படும் அவை முறையே வெட்சித் திணைகரந்தைத் திணைவஞ்சித் திணை,காஞ்சித் திணைஉழிஞைத் திணைநொச்சித் திணைதும்பைத் திணைவாகைத் திணைபாடாண் திணைபொதுவியல் திணைஎன்பனவாகும். சிலர் கைக்கிளை, பெருந்திணை என்ற இரண்டு அகப்பொருள் புறத்திணைகளையும் சேர்த்து எண்ணுவர்.