பகலவன் பிறந்த பாலை - தன்
பாதம் தவள்ந்து பயின்ற நன்பாலை
பஞ்சுரம் வீசும் பாலை - பாலை
யாழினை மீட்டி இசைத்திடும் பாலை
விழி ஒளி முடிவினில் மணல் வழி கண்டு
மழை வழி முகிலும் மறைவது உண்டு
விரல் உயர் அரும்பின் வழை புகு வேரும்
குழலொலி தொலைவினில் நீரினை தேடும்
ஒட்டி பிறந்த உகிர் சதை போல
பாலையும் அனலும் பிரிந்திடா வாழும்
கதிர் ஒளி பட்டு நிலம் தணலாக
காணலின் நீரால் புள்ளினம் வாடும்
மண்ணின் பற்றால் மணிமுடி வேந்தன்
செருப்பறை முழங்கி பாலை பாசறையாக
அம்பிறை மழையால் நனைந்த நன்னிலமே
வெண்பிறை குளிரால் தணிவாய் எனவே
புண்மெய்யுடனே வேண்டினான் வீரன்
சுற்றம் மறந்து பெற்றவர் மறந்து
பெற்ற தன் கடனை புரிந்தான் பகலினில்
உற்றாள் நினைவை நொடியிலும் இழந்திலன்
பற்றிய கையில் வாளினை கொடுத்து
நெற்றியிலே வெற்றி திலகமும் இட்டு
கட்டி தழுவி முத்தமும் தந்தாள்
போர்க்களம் அதிலே தன் நினைவலை மோத
உள்ளம் பிரியாது ஒரு நிலையினில் இராது
கண்கள் இமையாது இரு கரங்களும் நீங்காது
இதழால் மொழியது நெஞ்சதீ அணையாது
மீண்டும் சேரவேண்டும் வெற்றி களிப்புடனே
என வாசல் பார்த்து வான்குறி பார்த்து
விடைபெற்று வந்தான் நடை சற்றும் மாறா
பொற்களம் அதை கடக்கையில் களவியல் எண்ணி
உளநிறைவின்றி உதிரம் பொழிந்தான்
விண்ணில் காணும் நிலவதுவே - காண
வட்ட்டென பொட்டென சுட்டிய சேய்க்கு
பெண்ணென கண்ணென கவியின் வரிக்கு
இக்தோர் கோளென பிரிந்தோர் காதலற்கு
வீரன் விண் பார்த்து வேண்டி நிற்க
அன்னிலவை முன்பார்த்து ஏங்கி நின்றாள்
ஓங்கிய மரத்தை தாங்கிய நிலத்தில்
வீற்றிருந்தாள் ஒருத்தி காத்திருந்தாள் ஒருவனுக்கு
கற்களை வீசிக்கொண்டு
அவள் சில்வண்டு மொய்க்கா சிறு மலர்
பொன்வண்ணம் மாறா புது மலர்
மொட்டுவிட்ட மலர்களிலே மொய்க்கும் வண்டு
தன் விழியை முத்தமிட திட்டமிட்டு வட்டமிட
மூடிக்கொள்வாய் மேலிமையை என
மூங்கில் பதற்காட்டில் மோதும் பனிக்காற்று
மெல்லியதாய் வீசியது
நிலமகள் மடியினில் வேரின்றி பிறந்தாய்
மழையின் நீரால் தாகம் தணிந்தாய்
சூரிய ஒளியால் வீரியம் பெற்றாய்
விசும்பின் வழியாய் என்னையே நினைத்து
காற்றுடன் அசைந்து படர்ந்தாய் முல்லையே
இவ்வேநிர் வேளையில் விலகி ஏன் நின்றாயோ
தளிர்ந்த என் மேனியை தாங்கும் மரமே
ஆயுள் முழுவதும் பற்றுதல் வரமே
என் உயிர் காத்த தன்னெழில் தலைவி
துணைவனை பிரிந்திங்கு வாழும் போது
தழுவுதல் கண்டால் தாங்குமோ தன்மனமே
இப்பாலையின் பிரிவினை யானும் கொண்டேனே
எனபாலையை முல்லை பகிர் வதும் உண்டு
பாதம் தவள்ந்து பயின்ற நன்பாலை
பஞ்சுரம் வீசும் பாலை - பாலை
யாழினை மீட்டி இசைத்திடும் பாலை
விழி ஒளி முடிவினில் மணல் வழி கண்டு
மழை வழி முகிலும் மறைவது உண்டு
விரல் உயர் அரும்பின் வழை புகு வேரும்
குழலொலி தொலைவினில் நீரினை தேடும்
ஒட்டி பிறந்த உகிர் சதை போல
பாலையும் அனலும் பிரிந்திடா வாழும்
கதிர் ஒளி பட்டு நிலம் தணலாக
காணலின் நீரால் புள்ளினம் வாடும்
மண்ணின் பற்றால் மணிமுடி வேந்தன்
செருப்பறை முழங்கி பாலை பாசறையாக
அம்பிறை மழையால் நனைந்த நன்னிலமே
வெண்பிறை குளிரால் தணிவாய் எனவே
புண்மெய்யுடனே வேண்டினான் வீரன்
சுற்றம் மறந்து பெற்றவர் மறந்து
பெற்ற தன் கடனை புரிந்தான் பகலினில்
உற்றாள் நினைவை நொடியிலும் இழந்திலன்
பற்றிய கையில் வாளினை கொடுத்து
நெற்றியிலே வெற்றி திலகமும் இட்டு
கட்டி தழுவி முத்தமும் தந்தாள்
போர்க்களம் அதிலே தன் நினைவலை மோத
உள்ளம் பிரியாது ஒரு நிலையினில் இராது
கண்கள் இமையாது இரு கரங்களும் நீங்காது
இதழால் மொழியது நெஞ்சதீ அணையாது
மீண்டும் சேரவேண்டும் வெற்றி களிப்புடனே
என வாசல் பார்த்து வான்குறி பார்த்து
விடைபெற்று வந்தான் நடை சற்றும் மாறா
பொற்களம் அதை கடக்கையில் களவியல் எண்ணி
உளநிறைவின்றி உதிரம் பொழிந்தான்
விண்ணில் காணும் நிலவதுவே - காண
வட்ட்டென பொட்டென சுட்டிய சேய்க்கு
பெண்ணென கண்ணென கவியின் வரிக்கு
இக்தோர் கோளென பிரிந்தோர் காதலற்கு
வீரன் விண் பார்த்து வேண்டி நிற்க
அன்னிலவை முன்பார்த்து ஏங்கி நின்றாள்
ஓங்கிய மரத்தை தாங்கிய நிலத்தில்
வீற்றிருந்தாள் ஒருத்தி காத்திருந்தாள் ஒருவனுக்கு
கற்களை வீசிக்கொண்டு
அவள் சில்வண்டு மொய்க்கா சிறு மலர்
பொன்வண்ணம் மாறா புது மலர்
மொட்டுவிட்ட மலர்களிலே மொய்க்கும் வண்டு
தன் விழியை முத்தமிட திட்டமிட்டு வட்டமிட
மூடிக்கொள்வாய் மேலிமையை என
மூங்கில் பதற்காட்டில் மோதும் பனிக்காற்று
மெல்லியதாய் வீசியது
நிலமகள் மடியினில் வேரின்றி பிறந்தாய்
மழையின் நீரால் தாகம் தணிந்தாய்
சூரிய ஒளியால் வீரியம் பெற்றாய்
விசும்பின் வழியாய் என்னையே நினைத்து
காற்றுடன் அசைந்து படர்ந்தாய் முல்லையே
இவ்வேநிர் வேளையில் விலகி ஏன் நின்றாயோ
தளிர்ந்த என் மேனியை தாங்கும் மரமே
ஆயுள் முழுவதும் பற்றுதல் வரமே
என் உயிர் காத்த தன்னெழில் தலைவி
துணைவனை பிரிந்திங்கு வாழும் போது
தழுவுதல் கண்டால் தாங்குமோ தன்மனமே
இப்பாலையின் பிரிவினை யானும் கொண்டேனே
எனபாலையை முல்லை பகிர் வதும் உண்டு
No comments:
Post a Comment