Wednesday, 5 March 2014

பாலையில் முல்லை

படர் கொம்பு :
நிலமகள் மடியினில் வேரின்றி பிறந்தாய்
மழையின் நீரால் தாகம் தணிந்தாய்
சூரிய ஒளியால் வீரியம் பெற்றாய்
விசும்பின் வழியாய் என்னையே நினைத்து
காற்றுடன் அசைந்து படர்ந்தாய் முல்லையே
இவ்வேநிர் வேளையில் விலகி ஏன் நின்றாயோ..

முல்லை :
தளிர்ந்த என் மேனியை தாங்கும் மரமே
ஆயுள் முழுவதும் பற்றுதல் வரமே
என் உயிர் காத்த தன்னெழில் தலைவி
துணைவனை பிரிந்திங்கு வாழும் போது
தழுவுதல் கண்டால் தாங்குமோ தன்மனமே
இப்பாலையின் பிரிவினை யானும் கொண்டேனே..  

No comments:

Post a Comment